முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இலங்கை அரசியலில் ஓர் விதிவிலக்கு ஒட்டு மொத்த இல்ங்கையிலும் இப்படி ஒருவர் கிடைப்பது அரிதிலும்… அரிது என சகலரும் கூறுகின்றனர்.
நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சமான சூழ்நிலையில் ஏழைகள் அழைக்காமலே செல்லும் தோழன் அவர்.
இதனைக் கூட சிலர் இவருக்கு நாட்டு நிலை தெரியாது என விமர்சிக்க கூறும் அப்படி என்றால் கொரோனா வைரஸ் வருவதற்கு முதல் என்ன எல்லாம் கடுமையா வேலை செய்தனர் என மக்கள் கேட்கின்றனர்.
மனித நேயத்துடன் மக்களிற்கு சேவை செய்யும் ஓர் பண்பாளர் நாட்டில் கொரோனா பரவலை தடுத்து நிறுத்த பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அந்த வகையில் சமூக ஒன்றுகூடலே கொரோனா பரவுதலுக்கு முக்கிய காரணியாக சொல்லப்படுகின்ற நிலையில் அதனை தடுப்பதற்காக அரசாங்கம் நாடு முழுவதிலும் ஊரடங்க்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் வறிய மக்களுக்காக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றி ஓடிஓடி உதவி வருகின்றார் முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும.
தன்னலம் கருதாது அவர் செய்யும் இந்த சேவையானது மூவின மக்கள் மத்தியிலும் அவர் பெயர் உச்சரிக்கப்படுகின்றது என கூறினால் அது மிகையாகாது.
இவரின் சேவை வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சிங்கள மக்களிற்கு பெரும் உதவியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக நம் தமிழின மக்கள் மத்தியில் இப்படி ஒரு அமைச்சர் நம் தமிழினத்துக்கு கிடைத்திருந்தால்,..என்ற ஆதங்கம் எழாமல் இல்லை. இவரை பார்த்து என்றாலும் நம் தமிழ் தலைமைகள் திருந்தட்டும்.
கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றியே முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இத்தனை உதவிகளையும் பின்பற்றி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.