கொடிய கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் வேகமாக பரவிவரும் நிலையில் அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் உலக விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் என தனியாகவோ இல்லை ஒரு அமைப்பாகவோ அக்கறை எடுத்து போராடி வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவை கடல் அட்டையின் இரத்தத்தின் மூலம் குணப்படுத்தலாம் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடலட்டையின் இரத்தம் கொரோனா நோய்களிகளிற்கான புதிய மருந்தாகப் பாவிக்கப்பட உள்ளது.
கொரோனா நோயின் தீவிரத்தால், சுவாசச் சிக்கல் ஏற்பட்டு, ஒக்சிஜனின் அளவு பெருமளவு குறைவதால் சாவு ஏற்படுகின்றது.
இதற்கு ஏற்ற புதிய மருந்தாகவே கடலட்டையின் இரத்தம் உபயோகப்படுத்தப்பட உள்ளது.
மனிதனின் இரத்தத்தில் உள்ள ஹோமோகுளோபின் உருவாக்கும் ஒக்சிஜனின் அளவை விட நாற்பது மடங்கு ஒக்சிஜனை கடலட்டையின் இரத்தத்தில் உள்ள ஹோமோகுளோபின் உருவாக்குவதாக அறியப்பட்டுள்ளது.
இந்த இரத்தம் மனித உடலில் ஏற்றப்பட்டுத் துல்லியமான பெறுபேறுகளும், சுவாசம் சீரானமையும் உறுதிப்படுத்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சை முறையை, பிரான்சின் தேசிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான நிறுவனமான ANSM, மற்றும் தனிமனிதப் பாதுகாப்பிற்கான ஆணையமான CPP ஆகியவை அங்கீகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.