உலகளவில் இன்றுவரை தொற்றிக்கொண்டு உயிரிழப்புக்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனும் பாதிக்கப்பட்டிருந்தார் .
கடந்த 11 நாட்களாக சுய தனிமைக்குட்படுத்திக்கொண்ட 55 வயது நிரம்பிய பிரித்தானிய பிரதமர் இன்று மாலை அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா அறிகுறிகள் சற்றேனும் குறையாமல் இருந்தமையாலும் திடீரென உடல் வெப்பநிலை கூடுதலாக இருந்தமையாலும் அவரது மருத்துவர் அவரை உடனே வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியமையை அடுத்து அவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
மருத்துவ அவரச ஊர்தியை பயன்படுத்தாது தனது காரிலேயே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கடந்த வியாழக்கிழமை என் எச் எஸ் பணியாளர்களை உற்சாகப்படுவதற்காக வெளியில் வந்திருந்தபோது சோர்வாக காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பிரதமரின் காதலிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/SkyNews/status/1246900111046774785