வரலாற்றில் இலங்கை ரூபாயின் பெறுமதி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
அந்தவகையில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து, 199.40 ரூபாயைத் தொட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 6.1 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இலங்பை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றில் விற்பனைப் பெறுமதி, 199.40 ரூபாயாகக் காணப்பட்டது.
இதேவேளை 2019ஆம் ஆண்டு டிசெம்பர் மாத இறுதுயில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுதிமதி 183.33 ரூபாயாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.