நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வங்கித்துறையை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பிபாகவும் வங்கி நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படக்கூடாது எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே தனியார் துறை ஊழியர்களுக்கு ஏனைய நாடுகளில் நிவாரணம் வழங்கும் திட்டம் ஏனைய நாடுகளில் செயற்படுவதாகவும் எனவே அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய இடைக்கால கணக்கறிக்கை போதுமானதாக அமையாது என சுட்டிக்காட்டிய அவர், காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.