உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஒரு பெரும் பிரச்சினையாக உள்ள நிலையிலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜேர்மன் எல்லைகள் திறந்துவிடப்பட்டு 80,000 வெளிநாட்டு பணியாளர்கள் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். அதற்கு காரணம், இது ஜேர்மனியில் அறுவடைக்காலம்.
ஆகவே, பழங்களையும் காய்கறிகளையும் அறுவடை செய்வதற்காக, கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கிழக்கு ஐரோப்பிய பண்ணை பணியாளர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
ஜேர்மனி உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தன.
இதனால் எல்லை தாண்டி பணியாற்றும் பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், அறுவடை செய்ய போதுமான பணியாளர்கள் இல்லாததால் அறுவடை பாதிக்கும் என்றும், காய் கனிகள் விலை உயரும் அபாயம் ஏற்படும் என்றும் ஜேர்மன் விவசாயிகள் எச்சரித்திருந்தனர்.