சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், மக்கள் ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடிய புகைப்படங்கள் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவில் முதலில் பரவிய நிலையில், தற்போது அந்நாட்டில் நிலைமை சீராகி வருகிறது. எனினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரையும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கூறியுள்ளனர்.
இந்நிலையில், பல மாத ஊரடங்குக்கு பின் மாகாணங்கள் திறக்கப்பட்டதால் பிரபல சுற்றுலாதலமான Huangshan mountain park-ல் மக்கள் அதிக அளவில் கூடினர். ஏப்ரல் 4ஆம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இதை காண முடிகிறது.
அதில், 20,000பேரை மட்டும் நாள் ஒன்றிற்கு அனுமதிக்கும் Huangshan mountain park-ல், காலை 7:48மணிக்கே முழுமை அடைந்துள்ளது. எனவே நிர்வாகம், சுற்றுலா பயணிகள் இனி அனுமதியில்லை என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளது என்று வெளியிட்டுள்ளது.
இதேபோல் Shanghaiல் அமைந்துள்ள, Bund நீர்வீழ்ச்சி பகுதியிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் அங்கு அமைந்துள்ள கடைகளில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விற்பனை சூடுபிடித்துள்ளது.
சீனாவில், 82,641 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 3,335பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், தான் மக்கள் அதுகுறித்து அச்சப்படாமல் ஊரடங்குக்கு பின் தங்கள் வீடுகளைவிட்டு சுற்றுலா தலங்களுக்கு கூட்டமாக படை எடுத்துள்ளனர்.
சீன அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில், சீன சுகாதார நிபூணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.