பிரபல நகைச்சுவை நடிகர் புல்லட் பிரகாஷ் தனது 44 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த பிரகாஷ் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் மொத்தமாக 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
புல்லட் பிரகாஷ் இரைப்பை பிரச்சினைகள் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஐந்து மாதத்தில் திடீரென 35 கிலோ உடல் எடையை இழந்தார்.
இதன் காரணமாக பிரகாஷின் உடல்நிலை மேலும் மோசமானது.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரகாஷ் சிகிச்சை பலனின்றி திங்கள் இரவு உயிரிழந்தார்.
ராயல் என்பீல்ட் புல்லட் இருசக்கரவாகனத்தை பிரகாஷ் அதிகம் பயன்படுத்திய நிலையிலேயே புல்லட் பிரகாஷ் என அழைக்கப்பட்டார்.
அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.