பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின், ஜான்சனின் நகைச்சுவை உணர்வு நிச்சயம் கொரோனாவை வெல்ல உதவும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக 10 நாட்களுக்கு மேலாக தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டிருந்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், திடீரென்று தொடர் அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிகிச்சை பெற்று வரும் பிரதமருக்கு வெண்டிலேட்டர் உதவி எல்லாம் தேவைப்படவில்லை என்று அரசு அறிவித்திருந்தது.
இதை அறிந்த உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், ஜான்சன் விரைவில் குணமாகி திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டு வந்தனர்.
அந்த வகையில், ரஷ்ய ஜனாதிபதி புடின், விரைவில் குணமாக வேண்டும் என்று கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அதில் அவர், அன்புள்ள பிரதமருக்கு, இந்த கடினமான நேரத்தில் உங்களுக்கு எனது உண்மையான ஆதரவை தெரிவிக்க விரும்புகிறேன்.
உங்கள் ஆற்றல், நம்பிக்கை மற்றும் நகைச்சுவை உணர்வு போன்றவைகள் இந்த நோயைத் தோற்கடிக்க உதவும் என்று நான் நம்புகிறேன்
விரைவான மற்றும் முழுமையாக குணமடைய நான் மனதார விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் இருக்கும் ஜோன்சனுக்கு நேற்றிரவு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. அவர் மத்திய லண்டனின் செயின்ட் தாமஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த மருத்துவமனை நாட்டின் மிகச் சிறந்த அவசர சிகிச்சை பிரிவுகளை கொண்ட மருத்துவமனைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.