முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையில் தங்கியிருந்த சிங்களவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
ஜனகபுர பகுதியை சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விகாராதிபதிக்கு உதவியாளராக தங்கியிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மரணம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்.
இதேவேளை, பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் சட்டவிரோத விகாரை அமைத்த பிக்குவும் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.