ஐபிஎல் கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் இருந்து தனக்கு பிடித்தமான மிகச்சிறந்த இந்திய லெவன் அணியை ஷேன் வார்னே தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஐ.பி.எல் கிரிக்கெட்டில் தனக்கு பிடித்தமான மிகச்சிறந்த இந்திய லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.
வார்னேவை கவர்ந்த ஐ.பி.எல் அணி: ரோகித் சர்மா, ஷேவாக், விராட்கோஹ்லி, யுவராஜ்சிங், யூசுப் பதான், டோனி, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், சித்தார்த் திரிவேதி, முனாப் பட்டேல். இதில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயர் இடம் பெறவில்லை.
மேலும், “நான் 2008-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை ஐ.பி.எல்-ல் விளையாடினேன். அதன் அடிப்படையில் இந்த அணியை தேர்வு செய்திருக்கிறேன்’ என்று வார்னே தெரிவித்தார்.
ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி அற்புதமானவர் என்று புகழாரம் சூட்டினார் வார்னே.
இதே போல் தனக்கு எதிராக விளையாடிய அணிகளில் இருந்து 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான சிறந்த லெவன் அணியையும் வார்னே தேர்வு செய்துள்ளார். அந்த அணி: ஷேவாக், சனத் ஜெயசூர்யா, தெண்டுல்கர், பிரையன் லாரா, கெவின் பீட்டர்சன், சங்கக்கரா, ஆன்ட்ரூ பிளின்டாப், வாசிம் அக்ரம், டேனியல் வெட்டோரி, அக்தர், அம்புரோஸ்.