தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு வெள்ளாம்பெரம்பூர் பகுதியை சார்ந்தவர் சிவகுமார் (வயது 36). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ஆனந்தி (வயது 31). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 வருடம் ஆகும் நிலையில், 12 வயது பெண் குழந்தையும், 8 வயது ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், ஆனந்திக்கும், இப்பகுதியை சார்ந்த 16 வயது சிறுவனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்த நிலையில், இந்த விஷயம் சிவகுமாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து உனக்கும் – எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று கூறி கண்டித்து, முறையற்ற பழக்கத்தை கைவிட கூறி கூறியுள்ளார்.
இதனைப்போன்று, சிறுவனின் பெற்றோரும் விஷயத்தை அறிந்துகொண்ட நிலையில், சிவகுமார் வெளியே சென்ற நேரத்தில், சிறுவனின் பெற்றோர் ஆனந்தியின் இல்லத்திற்கு வந்து தனது மகனுடன் கொண்ட தொடர்பை கைவிட வேண்டும் என்று கூறி சத்தமிட்டு, தகாத வார்த்தையால் சத்தம் போட்டு சென்றுள்ளனர்.
சிவகுமாரும் வீட்டிற்கு வந்து மனைவியை அனைவரும் திட்டிக்கொண்டு இருப்பதை கண்டு, தானும் சேர்ந்து மனைவியை கண்டித்ததை அடுத்து இரவு அனைவரும் உறங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த நேரத்தில் ஆனந்தி மாயமாகியிருந்தார்.
ஆனந்தி தோட்டத்திற்கு சென்று இருக்கலாம் என்று சிவகுமார் எண்ணியிருந்த நிலையில், தோட்டத்திற்கு சென்று பார்க்கையில் மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் சிவகுமார் புகார் அளிக்கவே, சிறுவன் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.