கடந்த சில வாரங்களாகவே நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது முன்னதாக பாஜகவை சேர்ந்த பிரமுகர் மகனை திருமணம் செய்ய இருப்பதாக ஒரு செய்தி வெளியானது.
ஆனால் அந்தச் செய்தி பொய்யானது என்ற கீர்த்தி சுரேஷ் மலையாள ஊடகத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது திருமணம் குறித்து எந்த எண்ணமும் இல்லை, என்றும் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இளம் நடிகர் ஒருவர் கீர்த்தி சுரேஷிடம் அவரது காதலை தெரிவித்துள்ளதாகவும் ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது முழுமையான படிப்பில் கவனம் செலுத்தும் காரணத்தினால், தற்போது காதல் திருமணம் குறித்து யோசிக்கவும் இல்லை என்று கீர்த்தி திட்டவட்டமாக கூறியதாக தெரியவந்துள்ளது.