இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டு அனைவரையும் வீட்டில் இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ள நிலையில் யுவதி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (08) மட்டக்களப்பு களுதாவளை 1ம் குறிச்சியில் யுவதி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ் யுவதியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் தற்கொலைக்கான காரணத்தை கண்டறியும் நோக்கியில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.