மலையக தொழிலாளர்களிடம் இருந்து மார்ச் மாதத்திற்கான சந்தா பணத்தை அறிவிட வேண்டாம் என தோட்ட கம்பனிகளை அறிவுறுத்தியும் கம்பனிகள் சந்தாவை அறிவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மலையக தொழிலாளர் முன்னணியின் இணைத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அரவிந்தகுமார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அரவிந்தகுமார், சந்தா பணம், கடன் தவணை பணம் மற்றும் காப்புறுதி தவணை பணம் ஆகியவற்றை தற்போது வசூலிக்க வேண்டாம் என அரசாங்கம் கூறியும் தோட்ட நிர்வாகங்கள் அவற்றை அறவிட்டுள்ளதாக கூறினார்.
இவ்வாறு அறவிடாவிட்டால் தொழிலாளர்களுக்கு அதிக தொகையை சம்பளமாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலேயே தோட்ட நிர்வாகங்கள் இந்த கள்ளதனமான வேலையை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்ட நிர்வாகங்களின் இவ்வாறான சுயநல போக்கு தொழிலாளர்களை பலி கடாவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தும் இவ்வாறு தொழிலாளர்களிடம் இருந்து அறவிட்ட பணத்தை அவர்களுக்கே மீள செலுத்துமாறு தோட்ட நிர்வாகங்களை வலியுறுத்துவத விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.