அமெரிக்காவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான மளிகை பொருட்களை நாக்கால் நக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் புகைப்படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜெனிபர் வால்கர். இவர் அங்குள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர் கடையில் இருந்த $1,800 மதிப்பிலான மளிகை பொருட்களை வேண்டுமென்றே தனது நாக்கால் நக்கியுள்ளார்.
ஏற்கனவே கொரோனா பீதியில் அமெரிக்கா உறைந்துள்ள நிலையில் ஜெனிபர் செயலால் கொரோனா தொற்று ஏற்படுமோ என கடை ஊழியர்கள் கலக்கமடைந்தனர்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்து ஜெனிபரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மாமிசம் மற்றும் மதுவை கையில் வைத்திருந்த ஜெனிபர் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்ச்யில் பொருட்களை நாக்கால் நக்கியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் ஜெனிபருக்கு கொரோனா இருக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் அவர் நக்கிய பொருட்கள் அழிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.