இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இரவு பகலாக மருத்துவர்கள், நர்ஸ்கள் உயிரை காக்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையினர் ஓய்வெடுத்துக் கொள்ள பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் அவருக்கு சொந்தமான ஆறு மாடி ஓட்டலை வழங்க முன் வந்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து வெளியிடும் போது,
மக்களின் உயிரைக் காப்பாற்ற இரவும் பகலும் பாடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு என்னால் ஆன உதவியை செய்வது பெருமை.
அவர்கள் மும்பையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஓய்வெடுக்க இடம் தேவை என்பதால் கொடுக்க முன் வந்துள்ளேன்.
மும்பை மாநகராட்சி மற்றும் சில தனியார் மருத்துவமனைகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் வைரலானதில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.