பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரமர் போரிஸ் ஜான்சன் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டதாகவும் பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் பரவலை பிரித்தானியாவில் கட்டுப்படுத்த முடியாததால், நாள் தோறும் நாட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டு இருக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 980-ஐ எட்டியுள்ளதால், இதன் மூலம் பிரித்தானியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,958-ஐ தொட்டுள்ளது.
நேற்று 881 பேர் உயிரிழந்திருந்தனர். அதற்கு முந்தைய தினம் 938 பேர் கொரோனாவல் ஒரே நாளில் உயிரிழந்த நிலையில், தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 980-பேர் உயிரிழந்துள்ளதால், பிரித்தானிய இன்னும் ஒரு மோசமான நாளை சந்திப்பதுடன், தினசரி இறப்புகளில் அதிகம் உயிரிழப்பை இன்று பதிவு செய்துள்ளது.
இந்த நோய் காரணமாக நேர்மறை சோதனை முடிவுகளை பெற்றவர்களில் 19,304 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனாவால் லண்டனில் இருக்கும் St Thomas மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டார்.
இதையடுத்து இன்று அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து பிரதமர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், பிரதமர் நல்ல நிலையில் குணமாகி வருகிறார், அவர் ஓய்வு நேரங்களுக்கிடையில் குறுகிய நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.
அவர் தனது மருத்துவர்களிடம் பேசியதோடு மட்டுமின்றி, தனக்குக் கிடைத்த நம்பமுடியாத கவனிப்புக்காக முழு மருத்துவக் குழுவினருக்கும் நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.