கனடா – புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்க நடப்பாண்டு நிர்வாகம் சரியாய் செயற்படவில்லை என்பதனை நான் பகிரங்கமாக எழுதியதை பலர் ஆதரித்தும், சிலர் கேள்விகள் எழுப்பியும் என்னை தொடர்பு கொண்டார்கள், அவர்களுக்கு நான் இந்த தொடர் எழுதும் நோக்கம் சொன்னேன் புரிந்து கொண்டார்கள் என கனடா – புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கத்தின் ஆரம்பகால முக்கியஸ்தர் ஐங்கரன் தன் முகநுால் பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில்…
அவர்கள் போல் எனக்கும் கொஞ்சம் கவலையாகத் தான் உண்டு. ஆனாலும் இது காலத்தின் கட்டாயம். 6,50,000 ரூபாய்கள் கொரோனா அனர்த்த நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கலுக்காக ஒதுக்கப்பட்டு, அவை வழங்கப்பட்டதாக பதிவும் போட்டுள்ளார்கள்.
அனுப்பப்பட்ட ஆதாரம். அங்கு யார், எங்கு, என்ன விலையில் பொருட்கள் கொள்வனவு செய்தார்கள் என்ற விபரம் நிர்வாகசபை உறுப்பினர்கள் கேட்டும் கொடுக்கப்படவில்லை.
மொத்தத்தில் 13 குடும்பங்களுக்கு கொடுத்த ஆதாரம் மட்டுமே தரப்பட்டது. அப்போ இந்த தன்னிச்சை முடிவுகள் எடுப்போர் மக்களுக்கு கொடுத்த பணத்தை சுருட்டி தங்களுக்குள் வைத்துக் கொள்கின்றார்கள்.
ஏமாளி மக்களை நீங்கள் ஏமாத்துவது உங்களின் புத்திசாலித்தனம். அதற்குள் நான் வரவில்லை. அதற்கு ஏன் பெருமை மிக்க என் மண்ணின் பெயரிலுள்ள சங்கத்தை பாவிக்கிறீர்கள்?
கூடுதல் தகவலாக, ஒரு ஊடக அறிக்கையில் இந்த பேக்காட்டு நிகழ்வை பெரிதாய் சித்தரித்து விளம்பரமும் செய்தார்கள்.
அதில் அந்த செய்தியாளர் சொல்கின்றார்,
புங்குடுதீவில் வாழும் “ஏழை, எளிய” மக்களுக்கு என்று. வயிறு பத்தி எரிந்தது.
இன்னமும் அவர்களை ஏழைகளாகவும் கை ஏந்துபவர்களாகவும் வைத்திருக்கும் எம் ஊர்சார் சங்கங்களை நினைத்து.
உங்களுக்குத் தெரியுமா புங்குடுதீவில் வேலை வாய்ப்புகள் நிறைய உண்டு ஆனால் வேலை செய்ய ஆக்கள் இல்லை என கனடா – புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கத்தின் ஆரம்பகால முக்கியஸ்தர் ஐங்கரன் தன் முகநுாலில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.