இந்தியாவில் உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள ஜெகனாபாத்தை சேர்ந்த தம்பதியின் 3 வயது குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.
இதனால் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்து ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் அனுப்ப அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாக குழந்தையின் குற்றம் சாட்டியுள்ளார்.
Mother in Bihar with 3yrs old child's dead body in hand, screaming, crying but no help reached. She could not find ambulance or medical assistant. @NitishKumar ji this happens in Patna. #LockdownExtended #LockdownKeDushman #CoronavirusOutbreakindia pic.twitter.com/nc49rKtAZk
— QueenBee (@vaidehisachin) April 11, 2020
இதனால் குழந்தை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என அக்குழந்தையின் தாய் அழுதுகொண்டே சாலையில் தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கலங்க செய்துள்ளது.
இதுதொடர்பாக தெரிவித்த ஜெகனாபாத் மாவட்ட நீதிபதி, இதுகுறித்த உண்மை என்ன என எனக்கு தெரியவில்லை. விசாரணையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.