பிரித்தானியாவில் பிரபல நடிகை ஹிலாரி ஹீத், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் லிவர்பூலில் பிறந்த ஹிலாரி, 1968 ஆம் ஆண்டு வெளிவந்த மைக்கேல் ரீவ்ஸின் திகில் திரைப்படமான விட்ச்ஃபைண்டர் ஜெனரல் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர்.
மேலும் ஆன் அவ்புலி பிக் அட்வென்ச்சர் ( An Awfully Big Adventure), நில் பை மவுத் (Nil by Mouth) ஆகிய படங்களுக்கு ஹிலாரி பைனான்சியராக இருந்தார்.
இந்நிலையில் 74 வயதான ஹிலாரி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த ஹிலாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் அலெக்ஸ் வில்லியம்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.