யாழ்.மாவட்டத்தில் இதுவரை 205 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கு ம் நிலையில் புதிதாக தொற்றுடைய எவரும் அடையாளம் காணப்படவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.,
அத்தூடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் இதுவரை சந்தேகத்தின் பெயரில் எவரும் அனுமதிக்கப்பட வில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 76 பேருக்கும், தனிமை படுத்தல் நிலையங்களில் உள்ள 129 பேருக்கும் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
எனினும் நோயாளர் எண்ணிக்கை மாவட்டத்தில் 7ஆகவே உள்ளதுடன் புதிதாக நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.