கொரோனா தொற்று அறிகுறி தோன்றியதால் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மருத்துவரே பாலியல் தொல்லை கொடுத்ததால், ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து புத்தகயா மாவட்டத்துக்கு கடந்த மாதம் 25ம் திகதி கணவருடன் வந்துள்ளார். இவர் லூதியானாவில் இருக்கும் போது தனது வயிற்றில் இருந்த 2 மாத கருவை கலைத்துவிட்டதால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கயாவில் உள்ள மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், குறித்த பெண்ணிற்கு கொரோனா அறிகுறி தென்பட ஆரம்பித்ததால் கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்பு சோதனையில் கொரோனா இல்லை என்றதால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு வந்ததிலிருந்து குறித்த பெண் ஒருவித நடுக்கத்துடனும், பயத்துடனும் இருந்ததால் அவரது மாமியார் அவரை விசாரித்துள்ளார்.
கொரோனா சிகிச்சையின் போது மருத்துவர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறிய நிலையில், பின்பு மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டு அப்பெண் கடந்த 6ம் திகதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் கோபத்தில் ஆழ்ந்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த பெண்ணின் மாமியாரை மருத்துவரை அடையாளம் காட்டுவதற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் தற்போது வரை குற்றவாளியினைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
பின்பு சிசிடிவி காணொளியினை சோதித்ததில் மருத்துவர் உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்ற 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்துள்ளவர் என்று கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும் சரியான குற்றவாளியை தேடும் பணியில் பொலிசார் தீவிரமாக இரங்கியுள்ளனர்.