கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இதற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று ஆக்ஸ்போர்டு பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸிற்கு இதுவரை 108,330 பேர் உயிரிழந்துள்ளனர். 1,771,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் எளிதாக பரவுவதால், இதற்கான தடுப்பூசியை உலகின் பல்வேறு நாடுகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. அதற்கான வேலைகளும் பல்வே நாடுகளில் நடை பெற்று வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று அதன் கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சி குழுவில் இருக்கும் பேராசியர் Sarah Gilbert கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், எங்களின் குழு கண்டுபிடிக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக அமையும், அதில் தனக்கு 80 சதவீதம் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் இந்த தடுப்பூசிக்கான சோதனைகள் மனிதர்கள் மீது நடத்தவுள்ளோம்.
இந்த வகை தடுப்பூசி நாங்கள் செய்த பிற விஷயங்களை(ஆராய்ச்சிகள்) அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரிடம் நிச்சயமாக செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடுமா என்று கேட்டதற்கு, ஆம், ஆனால் அதற்கு நாங்கள் இன்னும் சில தூரம் செல்ல வேண்டும், எல்லாவற்றையும் சரியாக செய்தால் நிச்சயமாக இது சாத்தியமாகும், இது என்னுடைய தனிப்பட்ட பார்வை என்று கூறியுள்ளார்.