பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வாழ்க்கை முழுவதும் கடன்பட்டிருப்பதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தொடர் அறிகுறி காரணமாக, பிரித்தானியர் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஞாயிற்றுக் கிழமை, லண்டனில் இருக்கும் St Thomas மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதோடு 7-வது(நாள்) இரவை அங்கு கழித்து வருகிறார்.
சமீபத்தில் பிரதமர் அலுவலகம், பிரதமர் தீவிர சிகிச்சையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர் உடல் நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், இடையில் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் நடப்பதுடன், சில நேரங்கள் மருத்துவமனையின் படுக்கையில் இருந்தபடி திரைப்படங்களை பார்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி, போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது, அவருடைய காதலியும், கர்ப்பிணியுமான Carrie Symonds, அவரை ஊக்கப்படுத்தும் விதமாக கடிதம் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஸ்கேன்களை அனுப்பியதாக செய்திகள் வெளியானது
According to Number 10 the Prime Minister has told friends he owes his life to the doctors and nurses who looked after him, reports @bbcbenwright. Boris Johnson is expected to spend the coming weeks resting and recovering and will not rush his return to work.
— Chris Mason (@ChrisMasonBBC) April 11, 2020
இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் போரிஸ் ஜோன்சன் தன் நண்பர்களிடம், தன்னை கவனித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது, அவர்களுக்கு நான் வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் வரும் வாரங்களில் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால், உடனடியாக பணிக்கு திரும்பமாட்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.