கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்ததால், நாடு திரும்ப முடியாமல் இருந்த 70 வயது முதியவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
உலகில் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பயணத்தடைகளும் விதித்துள்ளது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து சுற்றுலா விசா மூலம் M Sreekumar என்பவர் தன்னுடைய மனைவியான Sreekumari-யுடன், ஐக்கிய அரபு அமீரகத்தின், ஷார்ஜாவில் இருக்கும் தன்னுடைய மகளின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக வந்துள்ளார்.
அப்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக இருநாடுகளுக்குமிடையே பயணத்தடை இருப்பதால், அங்கிருந்த Sreekumar திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
இது குறித்து Sreekumar-ன் உறவினர் Satish Kumar Menon என்பவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்தேன்.
அவர் எந்தவொரு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சற்று வருத்ததில் இருந்தார்.
ஏனெனில் அவர் ஒரு மாதத்திற்கு மேலாக இங்கு வந்திருந்தார். கேரளாவில் உள்ள தனது சொந்த ஊரான எர்ணாகுலத்திற்கு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் இந்த காலவரையற்ற விமான இடைநீக்கம் அவரை மேலும் கவலையடையச் செய்தது, இருப்பினும், அவர் அதை ஒருபோதும் காட்டமால் இருந்தார்.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் ஷார்ஜாவில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது, திடீரென்று மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்தார். இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இரவு முழுவதும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் தொடர்ந்து மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர், வெள்ளிக் கிழமை காலை உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மூத்தவர் Sreeja S இவர், ஷார்ஜாவிலும், மற்ற மகள் Sreela S தனது குடும்பத்தினருடன் எர்ணாகுளத்திலும் தங்கியுள்ளனர்.
உடலை திருப்பி அனுப்ப எந்த வழியும் இல்லை என்பதால் ஷார்ஜாவில் இருக்கும் தகனத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று Satish Kumar Menon கூறியுள்ளார்.