இலங்கையில் மேல்மாகாணத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவால் இன்று முற்பகல் 10 மணிக்கு வெளியிடப்பட்ட ‘கொவிட் -19’ நாளாந்த நிலைவர அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 45 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 27 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 22 பேரும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும், யாழ்ப்பாணத்தில் எழுவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 7 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும் , குருணாகலையில் மூவரும் , மாத்தறையில் இருவரும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 7 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும் , குருணாகலையில் மூவரும் , மாத்தறையில் இருவரும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு இலக்கான 197 பேரில் எழுவர் பலியாகியுள்ளதுடன், 54 பேர் குணமடைந்துள்ளனர். 136 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.