அடுத்த 18 மாதங்களில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலொழிய பிரித்தானியா சாதாரண நிலைக்கு வருவது கடினம் என பிரித்தானிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்தபடியே அல்லுவலகப் பணிகளை தொடர்வதும், கொரோனா அறிகுறிகள் இருந்தால் ஏழு நாட்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதும் அடுத்த ஆண்டுவரை கூட தொடரலாம்.
அமைச்சர்கள் பள்ளிகள், கடைகள் முதலானவற்றை சில வாரங்களில் திறக்க விரும்புகிறார்கள்.
ஆனால், மூத்த அரசு அதிகாரிகள், கொரோனாவுக்கான தடுப்பூசியோ அல்லது மருந்தோ கண்டுபிடித்தால் மட்டுமே கொரோனா கட்டுப்பாடுகளை விலக்க முடியும் என்கின்றனர்.
அதுவரை பிரித்தானியா, இந்த முடங்கிக் கிடத்தல், வீட்டிலிருந்தே அலுவலகப் பணி போன்ற மாற்றங்களுக்கு பழகிக்கொள்ளவேண்டியதுதான் என்கின்றனர் அவர்கள்.
நேற்றிரவு பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஒரு அலுவலர், சமூக விலகல் கட்டுப்பாடுகள் காலவரையரையின்றி தொடரலாம் என்றார்.
இதற்கிடையில், பிரதமரது பொறுப்புகளை கவனித்துக்கொள்ளும் Dominic Raab, கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக்கொள்வதற்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.