தாய்லாந்தில் தாயின் வயிற்றில் இருந்து உலகை எட்டிப் பார்க்கும் பச்சிளங்குழந்தைகளுக்கும் கொரோனா பயத்தால் முக கவசம் அணிவிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிவருகின்றன.
பிரசவ அறையில் முக கவசம் அணிந்த நர்சுகளின் கைகளில் முக கவசம் அணிந்த நிலையில் இருக்கும் பிஞ்சுக்குழந்தைகளின் காட்சிகளை பாங்காக்கில் உள்ள பிராரம்-9 என்ற மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
வெல்டர்கள் அணியும் முக ஷீல்டு போல பிளாஸ்டிக்கில் இந்த கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இருமல் மற்றும் தும்மலால் மருத்துவப் பணியாளர்களிடம் இருந்து கொரோனா பரவாமல் இருக்க பிறந்த உடன் குழந்தைகளுக்கு முக கவசம் மாட்டுவதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.