நாட்டில் ஆசுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாமாகவே இலங்கைக்கு பரவவில்லை என்றும் , மாறாக அதனை இலங்கை அரசாங்கமே கொண்டு வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் முன்வைத்துள்ளார்.
இந்த வைரஸ் அபாயம் ஏற்பட்ட காலத்தில் குறைந்த பட்சம் விமான நிலையத்தை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்ட அவர், குறைந்தது வெளிநாட்டில் இருந்து வருபவர்களையாவது தடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அன்று அவ்வாறு செய்யாததன் விளைவே இப்போது நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சனைக்கு காரணம் எனவும் இதன்போது அவர் மேலும் கூறியுள்ளார்.



















