உருவத்தில் மாத்திரம் தான் அழகுராணியாக இருக்க விரும்பவில்லை நோயாளருக்கு சேவையாற்றும் தாதியராக இருப்பதில் பெருமையடைகின்றேன் என அவர் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் பல அழகுராணி பட்டங்களை சொந்தமாக்கிகொண்ட சியாமா தகநாயக்க எனும் பெண் உளத்தாலும் அழகுராணியாக நோயாளி கவனிப்பில் ஈடுபடுத்தி அணைவரது பார்வையை ஈர்த்துள்ளார்.
தாதியர் துறையை பல பெண்கள் வெறுப்பானதாக இரவு பகல் கடமை என புரிய வேண்டும் அருவருப்பான நோயாளர்களை சந்திக்க வேண்டிவரும் போன்ற காரணங்களால் அவற்றை தேர்ந்தெடுப்பதில் தவிர்க்கின்றார்கள் .
ஆனால் இவர்களுக்கெல்லாம் எதிர்மாறாக அணைத்து இலங்கையரையும் திரும்பி பார்க்க வைக்கும் இளம் பெண்ணாண அழகியான சியாமா தனக்கு மொடலிங் துறை விளம்பரங்கள் மூலம் பல கோடிக்கணக்கு பணங்களை மாதம் மாதம் கொடுக்க போட்டி போட்டுக்கொண்டு முன்னனி விளம்பர நிறுவனங்கள் தயாராக உள்ள போது அவற்றில் காணும் திருப்தியை விட நோயாளருக்கு பராமரிக்கும் பணியான தாதியர் சேவையே தனக்கு பிடித்துள்ளதாக கருதி அதில் பயிற்சிக்கல்லூரியில் இணைந்து கொண்டு தற்போது தாதிய உத்தியோகத்தராக சேவைபுரிகின்றார்.
மொடலிங் துறையிலிருந்து அழகுராணி பட்டங்களை தலையில் பல கீரிடங்களை சூட்டிய போது பெற்ற சந்தோசத்தை விட தாதிய உத்தியோகத்தராக கொழும்பிலுள்ள டி சொய்சா மகப்பேற்று மற்றும் சிறுவர் பிரிவு விடுதிகளில் கடமையாற்றுவதில் கிடைக்கும் கீரிடமே சிறப்பாக உள்ளது.
பகுதி நேரம் மொடலிங் துறையையும் விடாமல் அதிலும் ஈடுபடுகின்றார்கள்.இதே நேரம் அவர் கொரோனா தொற்று நோயிற்கான விளம்பரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் அதிகமாக பணியாற்றி வருகின்றார்.
இவர் Miss Earth Sri Lanka 2017 அழகுராணி பட்டத்தினை பெற்று முழு இலங்கையரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.
தற்போது 2020 மனதாலும் அழகானவர் என்பதன் மூலம் இவரது சேவை அணைவரையும் கவனிக்க வைத்துள்ளது.