இந்தியா முழுவதும் மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேலும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் இந்திய பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து மோடி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போது, ஊரடங்கு உத்தரவை நீடித்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதேவேளை இதுவரை இந்தியாவில் 10,363 பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 339 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















