இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24மணித்தியாலத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,600 பேர் நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 26 ஆயிரத்து 600 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.