சிவநேசதுரை சந்திரகாந்தனால் (பிள்ளையானால்) கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான் விலக்கப்பட்ட பின்னர் , கிழக்கு மாகாண முதலமைச்சராக விளங்கிய பிள்ளையான் பல கொலை சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில் பிள்ளையானின் கொலைப்பட்டியல் இதோ:
- அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். 07/02/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.
- E.கௌசல்யன், மட்டக்களப்பு – அம்பாறை அரசியல் துறை பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள். 07/02/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.
- தர்மரட்ணம் சிவராம், சிரேஷ்ட ஊடகவியலாளர். 28/04/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.
- ஐயாத்துரை நடேசன், சிரேஷ்ட ஊடகவியலாளர். 31/05/2004 அன்று கொலை செய்யப்பட்டார்.
- வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், திருகோணமலை மாவட்ட தமிழர் அமைப்பின் உறுப்பினர். 07/04/2006 அன்று கொலை செய்யப்பட்டார்.
- சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத், உபவேந்தர் கிழக்கு பல்கலைக் கழகம். 15/12/2006 அன்று கடத்தப்பட்டு பொலன்னறுவை மாவட்டம், செவனப்பிட்டி, தீவுச்சேனை என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார்.
- ஜோசப் பரராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். 25/12/2005 அன்று மட்/புனித மரியன்னை இணைப்பேராலயத்தினுள் வைத்து கொலை செய்யப்பட்டார்.
- வர்ஷா ஜூட் என்னும் 6 வயது சிறுமி, 11/03/2009 அன்று திருகோணமலையில் கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
- சதீஷ்குமார் தினூஷிகா என்னும் 8 வயது சிறுமி, 28/04/2009 அன்று மட்டக்களப்பு, பூம்புகார் என்னும் இடத்தில் வைத்து கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த கொலைப்பட்டியல் தொடர்பில் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ள நிலையில் , சில தரப்புகள் பிள்ளையானை கிழக்கின் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும் என்னும் முனைப்பில் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




















