இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 238ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட 5 நபர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.