கொவிட் 19 வைரஸை ஒழிக்க அரசாங்கம் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றியளித்துள்ளதாகவும், சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகளை வரவேற்பதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அந்த செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அவர், நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை எதிர் நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்தில் பலமிக்க நாடுகள் நழிவுற்றுள்ள நாடகளுக்கு உதவியளிக்க வேண்டும்.
கொரோனாவால் நாட்டை முடக்க எடுத்த தீர்மானம் வரவேற்கதக்கது.
சுகாதார சேவைகள், பொலிஸார், பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைவரும் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றனர்.
தனியார் துறையும் பொது மக்களும் இணைந்து பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர். இது வரவேற்கதக்கது.
ஆனால் அரசாங்கத்தின் தோல்வி என்னவென்றால், ஜனவரி மாத தொடக்கத்தில் தேவையான உபகரணங்களை பெற தவறியதை கூறலாம்.
ஆனால் தற்போது போதுமான உபகரணங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
நாம் இதுவரை எதிர்கொண்ட மிகவும் சவாலான காலங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில் உலகப் போர் நடைபெற்ற காலங்களில் கூட எதிரி யார் என எங்களுக்குத் தெரியும்.
ஆனால் இந்த நேரத்தில் எங்கள் எதிரி யார் என தெரியாது. மேலும் அனைத்து பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. உலகத் தலைவர்கள் யாராவது முன் வந்து இதனை சரி செய்ய வேண்டும்.
இலங்கை மீண்டும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் சீனாவிடம் கடன் பெற வேண்டுமா என இதன் போது ஊடகவியலாளர் வினவினார்.
´நாங்கள் சீனாவிடம் கேட்கலாம், ஆனால் அவர்கள் உலக நாடுகள் குறித்து கொள்கை ரீதியிலான முடிவை எடுக்க வேண்டும். காரணம் ஒரு நாட்டுக்கு கொடுத்தால் மற்றைய நாடுகளுக்கும் வழங்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நான் நினைக்கிறேன். ஆனால் அது கடினமாக இருக்கும். எப்படியும் தவணைகளை உரியவாறு செலுத்துவோம்.
எப்படியிருந்தாலும் இந்த வருடத்தில் அல்லது அடுத்த வருடத்தில் நாம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வோம். எனவே பணக்கார நாடுகள் ஏனைய நாடுகளுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்க வேண்டும்.
தற்போதைய காலத்தில் மக்கள் எதைப் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் பரிந்துரைக்கக்கூடிய ஏதாவது இருக்கிறதா என ஊடகவியலாளர் வினவினார்.
இதற்கு பதிலளித்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹோட்டல் மும்பை என்ற பழைய இந்தி திரைப்படத்தைப் பார்த்தேன். இப்போது பல புதிய திரைப்படங்கள் உள்ளன.
ஆகவே நான் பார்க்க விரும்புவதை நீங்கள் தான் கூற வேண்டும். நெட்ஃபிக்ஸில் பல திரைப்படங்களும், நாடகங்களும் உள்ளன. எனவே என்ன பார்க்க வேண்டும் என்று நீங்களே சொல்ல வேண்டும்.