கேகாலை, வறக்காபொல பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சந்தேகத்தில் தனிமைப்படுத்தும் முகாமுக்கு சிலரை அழைத்துச் செல்லும் வழியில் இடம்பெற்ற விபத்தை அடுத்து மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
கண்டி கொழும்பு பிரதான வீதியின் வறக்காபொல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தை அடுத்து விபத்துக்கு பஸ் வண்டியில் பயணிதவர்களில் மூவர் இவ்வாறு தப்பித்துச் சென்றுள்ளனர்.
எனினும் விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவர்களில் இருவரை கைது செய்துள்ளனர்.
மற்றைய நபர் குறித்த பகுதியில் தலைமறைவாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அதிகாரிகள், மக்களை மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.