ஏசி மூலம் கொரோனா வைரஸ் விரைவில் பரவுகிறது என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.
இது குறித்து ஆய்வாளர்கள் பல ஆராய்ச்சிகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஏ.சி மூலம் விரைவில் கொரோனா தொற்று ஏற்படுகிறது என்பதை உறுதி செய்துள்ளனர் சீனா ஆராய்ச்சியாளர்கள்.
அதில், சீனாவில் குவாங்சு என்ற பகுதியில் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்தவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. அவர் இருமும் போது ஏசி இயங்கி கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு வெவ்வேறு பகுதியில் உணவருந்தி கொண்டிருந்து 3குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த குடும்பத்தில் 10பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த 5மாடி உணவகம் முழுவதும் சீலிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட குடும்பத்தினரில், சிலருக்கு உடனடியாக அறிகுறிகள் தோன்றியுள்ளது. மற்றவர்களுக்கு பெப்ரவரி 5ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் நீர்துளிகள் மூலம் பரவியிருக்கலாம் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.