உலக சுகாதார அமைப்பிற்கு நிதியை நிறுத்துவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, அந்த அமைப்பு இது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது.
நீண்ட கல நண்பர்கள் என்று குறிப்பிட்டு, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனிவாவில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அமெரிக்காவின் இந்த முடிவு வருத்தமளிக்கிறது. இதை வெள்ளை மாளிகை மறுபரிசீலணை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
எங்களுக்கான எந்த நிதி நிறுத்தப்பட்டாலும், நாங்கள் தடையின்றி செயல்படவே விரும்புகிறோம்.
உலக சுகாதார அமைப்பு கொரோனா தடுப்பு பணி மட்டும் செய்யவில்லை, மலேரியா, எபோலா, புற்றுநோய், போலியோ உள்ளிட்ட பல நோய்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற முயற்சித்து வருகிறது.
ஆனால், தற்போது தொற்று நோயாக பரவி வரும் கொரோனாவின் இக்கட்டில் இருந்து சம்மாளிக்க அனைவரும் ஒற்றுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே மிகவும் அவசியம் என்று தெரிவித்தார்.
முன்னதாக சுகாதார அமைப்பை கடுமையாக சாடிய டிரம்ப், அது சீனாவுக்கு ஆதரவாகவும், அந்நாட்டின் உண்மைகளை மறைப்பதாகவும் பலமுறை குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், சுகாதார அமைப்பின் பணிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சாடினார்.
ஆனால், டிரம்பின் கருத்திற்கு அமெரிக்காவிலேயே பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதுகுறித்து சபாநாயகர், Nancy Pelosi கூறுகையில், இது டிரம்பின் அறிவற்ற தன்மையை காட்டுவதாகவும், ஒரு பலவீனமான தலைவர் மற்றவர்களை குறை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நிதியை நிறுத்துவதாக அறித்த அதே நாளில் சீனா,அமெரிக்காவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை அமெரிக்க குறைத்து மதிப்பிடுகிறது என்றும் சுட்டிக்காட்டியது.