பொதுத் தேர்தல் குறித்த திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்த திகதி குறிக்கப்பட்டது.
இருப்பினும் கொரோனா வைரஸ் பரவியதால் காலவரையறை இன்றி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மறு திகதி குறிப்பு இன்னும் இடம்பெறவில்லை என ஆணைக்குழு கூறுகின்றது.
இதேவேளை, இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மிகவிரைவில் சந்திக்கவுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.