கொரோனா வைரஸ் தொற்றினால் மீண்டும் அமெரிக்காவில் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி நேற்று மட்டும் அமெரிககாவில் 2,151பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,594ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இதனால் பல நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 2,180,741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 677,180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 34,594 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய நாட்களாக நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்திகும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் அந்நாட்டில் உயிரிழந்து வருவதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இன்று மட்டு 2,151பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 22,170 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மட்டும் இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 16 ஆயிரத்து 106 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், நியூயோர்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகனம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களை தவிர பிற நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரசின் தாக்கம் குறையாத நிலையில் நியூயோர்க்கில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மே 15ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.