நாட்டின் சில பகுதிகளில் கடுமையான வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகல, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு கடுயைமான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் வரையில் இந்த கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நீடிக்கும் எனவும், அதிக வெப்பம் காரணமாக சில உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 41 பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.