வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடு செல்வதற்கான அனுமதிப்பத்திரமோ அல்லது, வீசாவோ இன்றி காணப்பட்ட குறித்த இந்திய பிரஜை, நிலாவெளி மஸ்ஜின் வீதியில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
57 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது குறித்த நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.