கொரோனா வைரஸ் பரவலுக்கு வாய்ப்பே இல்லை என மார் தட்டும் வடகொரியா, அவசர அவசரமாக புதிய மருத்துவமனை ஒன்றை கட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் Pyongyang-ல் புதிய மருத்துவமனைக்கான பணிகள் கடந்த மாதமே துவங்கப்பட்டன. மேலும் 200 நாட்களில் குறித்த மருத்துவமனையானது கட்டி முடிக்கப்பட வேண்டும் என கிம் ஜாங் வுன் உத்தரவு வேறு பிறப்பித்திருந்தார்.
இதுவரை கொரோனா பரவல் தொடர்பில் மெளனம் சாதித்துவரும் கிம் ஜாங் வுன் நிர்வாகம், தற்போது குறித்த மருத்துவமனை கட்டிமுடிக்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
இரவு பகல் பாராமல் மருத்துவமனை கட்டிடத்தை விரைவாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்க வேண்டும் என கட்டுமான பணியாளர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீப காலமாக வடகொரியா முன்னெடுக்கும் ஏவுகணை சோதனைகளால் உலக நாடுகள் பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், வடகொரியா பின்னடைவை சந்திக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
அவசர அவசரமாக மருத்துவமனை கட்டிடம் கட்டிமுடிக்கப்படுவதன் நோக்கம் வெளியாகவில்லை என்றாலும், குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டிமுடிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



















