மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலிருந்து சத்துருக்கொண்டான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (16) வலையிறவு பாலத்தில் வைத்து கைதுசெய்ததுடன் 12 லீற்றர் கசிப்பும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மட்டு தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வலையிறவு பாலத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது, வவுணதீவு பிரதேசத்தில் இருந்து மட்டு நகர் பகுதிக்கு குறித்த பாலத்தினூடாக மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்திச் சென்ற நபரை வழிமறித்து சோதனையிட்டபோது மோட்டார் சைக்கிளில் இரண்டு கலன் மற்றும் போத்தலில் 12 லீற்றர் கசிப்பு கடத்திச் சென்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் பணயித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர் ஓசானம் சத்துருக் கொண்டான் பிரதேசத்தை சோந்த இளைஞர் எனவும் வவுணதீவு பாவக்கொடிச்சேனை பிரதேசத்தில் இருந்து வியாபாரத்துக்காக கசிப்பை எடுத்துச் சென்றதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.