உலகையே மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது கொரோனா எனும் கொடிய வைரஸ்.
கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹானில் ஆரம்பமான இந்த கொடிய வைரஸ் ஆனது உலகெங்கும் பரவி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உலகமே ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இந்த வைரஸிற்கு அதிக பலியான நாடுகளில் உலக வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
எனினும் இந்த கொடியவைரஸை 7 நாடுகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.
அந்தவகையில் ஜேர்மனி, தாய்வான், நியூசிலாந்து, ஐஸ்லாண்ட், பின்லாந்து, நோர்வே, மற்று டென்மார்க் ஆகிய நாடுகளே அவை ஆகும்.
இந்த ஏழு நாடுகளுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை என்னவெனில் அந்நாடுகளின் தமைப்பீடம் பெண்களிடமே உள்ளது.
அவர்களின் சரியான அணுகுமுறையே கொரோனாவை வெற்றிகரமாக கட்டுக்குள் வைத்திருக்க காரணம் என பலரும் கருதுகின்றனர்.



















