நடிகர் ராகவா லாரன்ஸ் கண்ணீர் விட்டு அழுத துணை நடிகர்களுக்காக பண உதவி செய்து நெகிழ வைத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த துணை நடிகர்களுக்கு போதுமான நிவாரணமின்றி கஷ்டப்படுவதாக அவர்கள் கண் கலங்கி வீடியோவில் பேசினார்கள்.
இந்த வீடியோவை நடிகர் உதய், லாரன்ஸுக்கு அனுப்பியுள்ளார். இதை கண்ட லாரன்ஸ், உடணடியாக 25 லட்சத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கொடுத்துள்ளார்.
https://t.co/Qf6PyRti2l pic.twitter.com/ABFnb5B6n1
— Raghava Lawrence (@offl_Lawrence) April 17, 2020
மேலும், ”என்னிடம் உதவி கேட்டு நிறைய ஃபோன்களும், வீடியோக்களும் வருகின்றது. என்னால் முடிந்தவரை நான் உதவி செய்து கொண்டிருக்கிறேன்.
வேறு யாராவது உதவ தயாராக இருந்தால் முன் வாருங்கள், உங்களின் ஒரு ரூபாய் கூட உதவும் என லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.




















