இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு, ஊவா, வட மத்திய மாகாணங்கள் மற்றும் மன்னார், வவுனியா மாவட்டங்களில் பல இடங்களில் இவ்வாறு பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமான மழைவீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இடி மின்னலின் போது மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.