எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக்கட்சி எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தயார். எனினும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் தீர்மான முடிவை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல் ஆணைக்குழு மீது பொறுப்பினை திணிக்காது, தீர்மானம் எடுக்க வேண்டும்.
யானைச் சின்னம் இன்னமும் ஸ்திரமான நிலையில் உள்ளது. சரியான நேரத்தில் மக்கள் இணைந்து கொள்வர்.
அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை காரணம் காட்டி அரசியல் எதிர்த்தரப்புக்களை அடக்கி ஒடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.