தமிழகத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மேலப்பாடி பகுதியை சார்ந்தவர் குமார். இவனது கூட்டாளியின் பெயர் பெட்ரிங் குமார். இவர்கள் இருவரும் திருட்டு தொழில் செய்து வரும் நபர்கள். இவர்களின் மீது பல வழக்குகள் உள்ளது.
இந்த நிலையில், குமாரின் இல்லத்திற்கு பெட்ரிங் குமார் அடிக்கடி சென்று வந்துள்ளான். இந்த சமயத்தில், குமாரின் மனைவிக்கும், பெட்ரிங் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து, கள்ளக்காதல் ஜோடி இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் குமாருக்கு தெரியவர, இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆனாலும், இதனை ஏற்றுக்கொள்ளாத கள்ளகாதல் ஜோடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவிக்கவே, ஆத்திரமடைந்த குமார் தனது நண்பன் பெட்ரிங் குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இவரின் திட்டப்படி கொலையை அரங்கேற்ற நேரத்திற்க்காக காத்திருந்துள்ளார்.
கடந்த 12 ஆம் திகதியன்று இருவரும் ஒன்றுசேர்ந்து திருட சென்ற சமயத்தில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரத்துக்கு உள்ளான குமார், பெட்ரிங் குமாரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் கைது செய்துள்ள குமாரை பெட்ரிங் குமாரின் கொலையில் இருந்த மர்மம் தெரியவந்துள்ளது. அதன் பின் காவல் துறையினர் சிறையில் அடைத்துளள்னர்.